எளிதில் மெஜாரிட்டியை நிருபிப்போம்!: டி.ஜெயக்குமார்!
இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. கூடம் முடிந்து டி.ஜெயக்குமார் பேசியதாவது
டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 9 பேருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினோம், அவர்களும் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்!
மொத்தம் 111 எம்.எல்.ஏ.க்கள் இன்று கூட்டத்தில் கலந்துகொண்டார், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒருவர் கலந்துகொள்ளவில்லை மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரின் ஆதரவும் உள்ளது. எனவே எங்கள் ஆட்சி எளிதில் மெஜாரிட்டியை நிருபிக்கும்!
கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் தவிர இதர எம்.எல்.ஏ.க்கள் உடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினோம், அவர்களின் ஆதரவும் எங்களுக்கு தான்!