152 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அரிய சந்திர கிரகணம்... மக்கள் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து வரும் இந்த கிரகணத்தினை வெறும் கண்களால் பார்க்கலாம் என அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கிரகணம் இந்தியாவில் இன்று மாலை 5:15 மணிக்கு துவங்குகிறது!


சென்னையில், மாலை, 6:05 மணிக்கு உதித்து பின்னர் மாலை, 6:22 முதல், இரவு, 7:38 வரை முழு கிரகணம் இருக்கும். இரவு, 7:39 மணி முதல், நிழல் விலக ஆரம்பித்து 8:43 மணிக்கு முழுமையாக விலகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!


இரவு 9:38 மணிக்குப்பின் நிலவு, அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும். இந்த நிகழ்வை பாதுகாப்பு கண்ணாடிகள் அணியாமல் வெறும் கண்களால் பார்க்கலாம். இன்று நடக்கும் சந்திர கிரகணத்தை சென்னை, கோவை, திருச்சி, வேலுார் ஆகிய அறிவியல் தொழில்நுட்ப மையங்களில், பொதுமக்கள் பார்வையிட, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




Pic Courtesy: fb/ Waran Vick



சந்திரகிரகணத்தின் நேரடி வீடியோ - NASA!