Senthil Balaji Case : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் என வரிசையாக நீதிமன்றபடிகளை ஏறிக் கொண்டிருக்கிறார். இவருடைய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரம் அவருடைய வீட்டில் கைப்பற்ற பென் டிரைவில் இருப்பதாக அமலாக்கத்துறை ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அதனை இன்றைய விசாரணையின்போது காட்டுமாறு நீதிபதிகள் அபய் ஓகா, மாஷி அமர்வு கேட்டது. அதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் சோயிப் ஹூசைன் வழக்கை உணவு இடைவேளை அல்லது நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? கல்லா என தெரியவில்லை - துரைமுருகன்!


இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் எத்தனை முறை வாய்தா கேட்டுக் கொண்டே இருப்பீர்கள் என கடிந்து கொண்டனர். வாதாட தயாராக இல்லை என்பதற்காக வழக்கை ஒத்திவைக்க கோருவது என்ன மாதிரியான செயல் என்றும் அதிருப்தியுடன் கேட்டனர். செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்கியும் வழக்கை ஒத்திவைக்க எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே இந்த வழக்கில் 8 முறை அவகாசம் அமலாக்கத்துறை கேட்டிருப்பதாகவும், பென் டிரைவில் இருப்பதாக கூறிய ஆணவங்களை காட்ட வேண்டும் என்றும் கூறினார். 


இதனையடுத்து வாதத்தை தொடர்ந்த சோயிப் ஹூசைன், செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் எக்ஸல் சீட்டில் 14. 2 கோடி ரூபாய் வசூலானதாக இருந்தது . அது பேருந்து ஓட்டுநர், நடத்துடனர் உள்ளிட்ட பணிகளுக்காக வசூலான தொகை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், அரசு பணிக்கு தேர்வு செய்யும் போர்டில் தான் இல்லை என செந்தில் பாலாஜி கூறுகிறார். ஆனால், அவருக்கு இது குறித்து அனுப்பப்பட்ட இமெயில்கள் உள்ளன என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் சோயிப் ஹூசைன் கூறினார். 


அடுத்து வங்கியில் பணம் டெபாசிட் செய்யப்பட்ட தொகை, செந்தில் பாலாஜி வங்கி கணக்கில் 60 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் ஹூசைன், செந்தில் பாலாஜி தரப்பு கூறுவது போல் இது விவசாயம் மூலம் கிடைத்த வருவாய் என்றால், அவர் தேர்தல் பிரமாண பத்திரத்தில் கூறியதற்கு இந்த தொகைக்கும் வித்தியாசம் இருப்பதாகவும் தெரிவித்தார். 


2013 முதல் 2022 ஆம் ஆண்டு அவரது வங்கிக் கணக்கில் 1.34 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும், ஆனால் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு எந்தவிதமான வங்கி சலான், ஆதார் மற்றும் பான்கார்டு எண்கள் இல்லை என்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் சோயிப் ஹூசைன் குற்றம்சாட்டினார். இதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை நாளை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தனர். 


மேலும் படிக்க | உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு? வந்து விழுந்த கேள்வி - டக்குனு ஸ்டாலின் சொன்ன பதில பாருங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ