கொஞ்சமாவது அறிவு இருக்கும் என பார்த்தேன். ஆனால் இந்த அளவுக்கு கூட இல்லை என இப்போதுதான் தெரிகிறது. விவரம் தெரிந்தவர்களுடன் பேசலாம், விவரம் தெரியாதவர்களிடம் என்ன பேசுறது? என்று அண்ணாமலைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று மகளிர் விடியல் பயன புதிய 5 நகர பேருந்துகள் 17 புறநகர் பேருந்துகள், கலைஞர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய வழித்தட பேருந்துகள் என 22 புதிய பேருந்துகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | கோவை : வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது - கொலைக்கான காரணம் இதுதான்!
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், பள்ளி கல்லூரி மாணவர்களின் வருகையின்போது தேவைக்கு ஏற்ப அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்,.குறிப்பிட்ட நிறுத்த முறை பேருந்துகள் பயணிக்க வேண்டும், இல்லாவிடில் அவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்லூரி மாணவர்களை அழைத்து செல்வது ஒரு சேவை அது ஒரு தொழில் அல்ல இதில் டிக்கெட் கணக்கு பார்க்கக் கூடாது என பேசினார். பின்னர் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு பேரிடராக அறிவிக்க முடியாது எனக் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து கண்ணீர் கடலில் மிதக்கும் சூழலிலும் இதனை பெயரிடராக மத்திய அரசு அறிவிக்காதது அவர்களுக்கு இதயத்தில் இருப்பது இதயமா அல்லது கல்லா என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் லஞ்சம் வாங்கிவிட்டார் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, கொஞ்சமாவது அறிவு இருக்கும் என பார்த்தேன் ஆனால் இந்த அளவுக்கு கூட இல்லை என இப்போதுதான் தெரிகிறது. விவரம் தெரிந்தவர்களுடன் பேசலாம் விவரம் தெரியாதவர்களிடம் என்ன பேசுறது என பதிலளித்தார். வேலூர் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் தற்போது வரை போதிய மருத்துவ வசதி, ஏடிஎம் வசதி உள்ளிட்டவை இல்லாது குறித்து கேட்டதற்கு, மாவட்ட ஆட்சியரும் ஆணையரும் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். மத்திய அரசு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுவது வரவேற்கத்தக்கது என கூறினார் அப்படி எடுக்கப்பட்டால் கனிம வளங்களை எடுக்க முடியாது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதலில் மத்திய அரசு அறிவு கட்டும் பார்க்கலாம் அதன் பிறகு பார்க்கலாம் என கூறினார்.
மேலும் படிக்க | கேரள நிலச்சரிவில் அரசியல் செய்கிறது பாஜக: செல்வப்பெருந்தகை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r