அமெரிக்க தயாரிப்பான பெல் 214 ரக விமானம் சென்னை வழியாக ஈரானுக்கு கடத்தப்பட இருந்த நிலையில் மத்திய அமலாக்கத்துறை சென்னையில் கைப்பற்றி விசாரனை நடத்தி முடக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பங்காக்கை சேர்த்த ஹமீத் இப்ராகிம் மற்றும் அப்துல்லா அவர்களின் மரிலாக் ஏவியோன் சர்வீசஸ் கோ லிமிடெட் நிறுவனம் அமெரிக்க தயாரிப்பான பெல் 214 ரக ஹெலிகாப்டரை வாங்கியுள்ளது. 2019 ம் ஆண்டு தாய்லாந்து வழியாக சென்னை துறைமுகம் மூலம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு ஸ்ரீபெரும்பத்தூரில் உள்ள "ஜே மாடடீ வர்த்தகக் கிடங்கில் (FTWZ)" இருப்பதை அறிந்த அமெரிக்க அதிகாரிகள் கொலம்பியாவில் உள்ள மாவட்ட நீதிமன்றம் மூலம் பிடிவாரண்ட் பெறப்பட்டு. முன்னதாக இது போன்ற விஷயங்களில் பரஸ்பர உதவி நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளதால் இதன் மூலம் அமெரிக்கா இந்தியாவிடம் தெரிவித்ததை அடுத்து மத்திய அமலாக்க இயக்குனரகதிற்கு (ED) தகவல் கொடுக்கப்பட்டது.


ALSO READ | சாதனை படைக்கும் GSTவசூல்; அக்டோபர் மாதம் ₹ 1,30 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது


இதனை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள "ஜே மாடடீ வர்த்தகக் கிடங்கில் (FTWZ)" நடத்திய சோதனையில் அமெரிக்க தயாரிப்பான பெல் 214 ரக ஹெலிகாப்டர் முழு பறக்கும் நிலையில் இல்லாமல் இன்ஜின் , இறக்கை, வால் பகுதி மற்றும் மேலும் சில பாகங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு தனித்தனி பார்சல்களாக வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் எளிதாக இதை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் தயார்படுத்தி வைத்திருந்ததும், 2019 கோரணா தொற்று காரணமாக உலகெங்கிலும் நிறுத்தபட்ட ஏற்றுமதி இறக்குமதி பிரச்சனைகளால் கடந்த 2 ஆண்டுகளாக மாத வாடகை அடிப்படையில் ஜே மாடடீ வர்த்தகக் கிடங்கில் (FTWZ) வைக்கப்பட்டிருந்ததும் அமலாகத்துத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய தண்டனை சட்டம் 17(1A) of PMLA 2002 படி
பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், இந்த ஹெலிகாப்டர் மற்றும் அதன் உதிரிப் பாகங்கள் ஜே மாடடீ வர்த்தகக் கிடங்கிலிருந்து வெளியே போகக் கூடாது என்று அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுவரை தங்களுக்கு எழுத்துப்பூர்வமான புகார் வரததால் இறக்குமதி செய்தவர்களை மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மேலும் ஹெலிகாப்டரை இங்கு வைத்திருந்த இதன் உரிமையாளர்களுக்கு சென்னையில் உதவியாக இருந்தவர்கள் யார்? யார் ? என விசாரித்து தகல்வல்களை சேகரித்து வருவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். பல்வேறு நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்து வரும் சூழ்நிலையில் உச்ச பட்ச பாதுகாப்பு உள்ள அமெரிக்க ஹெலிகாப்டர் அதன் எதிரி நாடான ஈரானுக்கு கடத்தப்பட்ட இருந்ததும் எந்த வகையான பயன்பாட்டிற்காக இது கடத்தப்பட்ட இருந்தது எனவும் தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் தெரியவரும்.


ALSO READ | உ.பி. சட்டசபை தேர்தல் போட்டியிட மாட்டேன் - அதிர்ச்சி அளித்த அகிலேஷ் யாதவ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR