சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வென்ற பின்னர் முறைப்படி தலைமைச் செயலகம் சென்று இன்று பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிச்சாமி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று முதல்முறையாக தலைமைச் செயலகம் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜ் மற்றும் அமைச்சர்கள் வரவேற்பளித்தனர். 


பின்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஜெயலலிதா அமர்ந்த அறைக்குச் சென்ற எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் அமர்ந்து 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். 


இதனைத் தொடர்ந்து அதிமுகவின் நிர்வாகிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் முதல்வருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.