திமுக ஆட்சிக்கு வரும் போது தமிழகம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை இழக்கிறது: EPS வேதனை
அமைதிப்பூங்கா என்கிற பட்டம் தமிழகம் இழக்கிறது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வேதனை
சென்னை: திமுக ஆட்சிக்கு வரும் பொழுதும் தமிழகம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை இழக்கிறது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, திமுக-வினரால் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுதல், அதிகார துஷ்பிரயோகம், சமூக ஊடகவியலாளர்களை அச்சுறுத்துதல், காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பணி செய்யும் போது சமூக விரோதிகளால் தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளன.
அந்த வரிசையில் நேற்று தாம்பரம் அருகே காவல்துறையினரின் வாகன சோதனையின் போது பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் பிடிபட்டுள்ளது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும் பொழுதும் தமிழகம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை இழந்து வருவதற்கு இது மட்டும் ஒரு எடுத்துக்காட்டு.
காவல் துறையினருக்கு அம்மாவின் அரசு அளித்ததுபோல் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதித்து சட்டம் ஒழுங்கை விடியா அரசு நிலைநாட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அதேபோல அரசுப் பேருந்து ஓட்டுநர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த செவ்வாய்க்கிழமை அன்றும் தமிழக அரசை விமரிசித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுக்குறித்து தனது ட்விட்டரில், SUV வாகனத்தை ஓட்டும் ஒரு நபர் பேருந்து ஓட்டுநரை தாக்கும் வீடியோவை வெளியிட்டார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR