100 நாள் வேலைத் திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும்: EPS
மாநிலம் முழுவதும் ஓடைகள், ஆறுகளில் தடுப்பணைகள் கட்டும் நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக EPS அறிவிப்பு!!
மாநிலம் முழுவதும் ஓடைகள், ஆறுகளில் தடுப்பணைகள் கட்டும் நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக EPS அறிவிப்பு!!
நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், 100 நாட்கள் வேலைத் திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் என்று, முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் ஓடைகள், ஆறுகளில் தடுப்பணைகள் கட்டும் நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் புதிய கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். மயிலாடுதுறை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து, நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு முறையும் குறித்த காலத்தில் நீர் கிடைக்கும் என்றும், இந்த திட்டத்தை நிறைவேற்ற முழுமூச்சாக பாடுபடுவோம் என அவர் குறிப்பிட்டார். இருக்கின்ற நீரை சேமிக்க ஏரிகள், குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மத்தியில் நிலையான ஆட்சி அமையவும், தமிழகம் வளம் பெறவும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு வாக்காளர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், 100 நாட்கள் வேலைத் திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ரூ.5 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.