ஆர்கேநகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை  நடத்தினார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஆர்கேநகர் தொகுதி வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் சிக்கின. அந்த பணத்தை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மூலம் வழங்கியதும், ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 


அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த, அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. 


தலைமை செயலகத்தில், முதல்வர் தலைமையில், மூத்த அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், அமைச்சர் விஜயபாஸ்கரும் கலந்து கொண்டார்.கூட்டத்தில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை, டாஸ்மாக் கடை பிரச்சினை குறித்துதான் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்தினார் என்றனர்.