சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள திண்டமங்கலத்தில் இன்று காலை சமத்துவ பொங்கல் விழா அதிமுக சார்பில் நடந்தது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். விழாவிற்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திரளானோர் வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிறகு அவர் மாட்டு வண்டியில் ஏறி விழா நடத்தும் மைதானத்திற்கு வந்தார். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர். இந்த பொங்கல் விழாவிலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதனையடுத்து விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தை பொங்கல் திருநாளில் அனைவருக்கும் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முடிஞ்சா என்ன அடக்கி பார்! ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்குள் வந்த நாய்!


தொடர்ந்து பேசிய அவர், " தை பிறந்தால் வழி பிறக்கும், இந்த ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி ஆண்டாக இருக்கும். விவசாயிகளுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான நாள். எத்தனையோ பண்டிகை வந்தாலும் விவசாயிகளின் உண்ணதமான நாள் இந்நாள். உழவர்களின் நண்பன் நானும் ஒரு விவசாயி. இங்கு பார்க்கும் போது என் இல்ல நிகழ்ச்சி போல் உள்ளது. உங்களோடு பொங்கல் கொண் டாடுவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். நாட்டின் முது கெலும்பு கிராமம். விவசாயம் வளர்ச்சி அடையும் போது நாடும் வளர்ச்சி அடையும். திமுக ஆட்சி பொறுப் பேற்று இரண்டரை ஆண்டில் எந்த நன்மை மக்கள் கண்டார்கள். இரண்டரை ஆண்டு வீணடித்தது தான் சாதனை.


ஏழை மக்கள் படும் தொல்லை பற்றி திமுகவுக்கு கவலை இல்லை. ஆட்டம் போட்டவர்கள் சிறைக்கு செல்கிறார்கள். நல்லது கெட்டது உங்களுடன் இருந்தவன் நான். நான்கரை ஆண்டு பொற் கால ஆட்சி நடத்தினோம். ஆனால், திமுக மக்கள் விரோத ஆட்சி எப்போது வீட்டுக்கு அனுப்பு வோம் என மக்கள் எண்ணுகிறார்கள். மோசமான ஆட்சி என கூறுகிறார்கள். வேதனை தான் மிஞ்சி இருக்கிறது. கொரோனா காலத்தில் விலை மதிப்பில்லா உயிர்களை காப்பாற்றினோம். அப்போது 7 லட்சம் பேருக்கு உணவு கொடுத்தோம். ரேசன் பொருட்கள் முறையாக வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைக்கு ரூபாய் 2500 கொடுத்தோம்.


அதிமுக ஆட்சி பொறுப் பேற்றபோது வறட்சி. இந்த பிரச்சினையில் இருந்து மக்களை காப்பாற்றினோம். புயல், மழையிலும் மக்களை காப்பாற்றினோம். தென் மாவட்டங்களில் கன மழை. 3 நாட்கள் உணவு கிடைக்க வில்லை மக்களை பார்க்காத ஆட்சி திமுக ஆட்சி. நாங்கள் திட்டமிட்டு ஆட்சி நடத்தினோம் என்றார். அதிமுக அரசு விவசாயி களின் அரசு. மேட்டூர் அணை 83 ஆண்டு தூர் வாரவில்லை. மேட்டூர் அணையில் வண்டல் மண்ணை எடுக்க அனுமதித்தோம். நீர் நிலைகள் காக்கப்பட்டது. ஓமலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் சிறப்பான சாலை வசதி செய்து கொடுத்தோம்.


அம்மா மினி கிளினிக் கொண்டு வந்தோம். இதை பொறுக்காத முதலமைச்சர் அம்மா மினி கிளினிக்கை மூடியது அரசு திமுக. 52 லட்சம் மாணவ மாணவி களுக்கு மடி கணினி கொடுத்தோம். இந்த திட்டத்தையும் நிறுத்தி விட்டனர். யாரும் கோரிக்கை வைக்காமல் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்து கொடுத்தோம். கல்வி கட்டணமும் அரசே ஏற்கிறது.வேறு எந்த ஆட்சியிலும் இது போன்ற திட்டம் கொண்டு வரவில்லை.


என்னென்ன நல்ல திட்டம் கொண்டு வந்தோமோ அவற்றையெல்லாம் நிறுத்தியது திமுக அரசு சாதனை. வீட்டுமனை இல்லாதவர்களுக்கு பட்டா கொடுத்தோம் முதியோர்களுக்கு முதியோர் உதவித்து கொடுத்தோம். வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு கொடுத்தோம் என பட்டியலிட்டார். சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டு ரோட்டில் ஆசியாவிலே மிகப்பெரிய கால்நடை பூங்காகொண்டு வந்தோம். இந்த கால்நடை பூங்கா மூடி கிடக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய்  முடங்கி கிடக்கிறது.


விவசாயிகள் கடன் இரண்டு முறை தள்ளுபடி செய்தோம் விவசாயிகளுக்கும் பொதுமக்கத்து உதவி செய்தோம். வரும்  பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான  பாராளுமன்ற தேர்தல், திமுக அரசுக்கு பாடமாக இந்த தேர்தல்  அமைய வேண்டும். என்றும் கேட்டுக் கொண்டார். தமிழகம் பாண்டிச்சேரி முழுவதும் 40 இடங்களில்  நமது கூட்டணியை ஆதரிக்க வேண்டும். மக்கள் நம்மை ஆதரிக்க வேண்டும். நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இதை  நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றிபெறும் மகிழ்ச்சிக்கான நேரம் வந்திருக்கிறது. அது உங்கள் கையில் தான் உள்ளது இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.


மேலும் படிக்க | Pongal Gift: 1000 ரூபாயை பெற இன்றே கடைசி நாள்... பொங்கலுக்கு பின்னரும் கிடைக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ