EPS vs OPS - ஜெயலலிதா நாற்காலியில் எடப்பாடி... 11ஆம் தேதி பட்டாபிஷேகம்?
ஜூலை 11ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்குமான மோதல் உச்சம் அடைந்துள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம்; பொதுக்குழு நடத்த தடை விதிக்க முடியாது என கூறி, 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக்கூடாது, புதிதாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது.
அதன்படி வானகரத்தில் ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக கூறி அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டார். மேலும், ஜூலை 11ஆம் தேதி அடுத்தப் பொதுக்குழு கூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி ஒற்றைத் தலைமை குறித்த கோஷங்கள் அந்தப் பொதுக்குழுவில் அதிகமாகவே எழுந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் தரப்பு பாதியிலேயே வெளியேறியது.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென்று ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை கோர முடியாது, இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க வேண்டுமென்று கூறி வழக்கு விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஜூலை 11ஆம் தேதி திட்டமிட்டப்படி வானகரத்தில் பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழும் வெளியாகியுள்ளது.
அந்த அழைப்பிதழில், நடக்கவிருக்கும் பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது, அன்றைய பொதுக்குழுவிலேயே இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்வது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 'நீதிமன்ற தீர்ப்பு பாஜக மத வெறியர்களுக்கு செருப்படி' - அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்
இதன் மூலம் 11ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவது உறுதியாகியிருக்கிறது. இதற்கிடையே கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டால் காணொலி காட்சி மூலம் பொதுக்குழு நடத்தப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR