பொதுச்செயலாளர் ஆகும் ஈபிஎஸ்! ஒபிஎஸ்-க்கு மீண்டும் செக்!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என திரு. மனோஜ் பாண்டியனும், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று திரு. வைத்திலிங்கமும், சட்டதிட்ட விதிகளை மாற்றி அமைத்தது செல்லாது என்று ஜே.சி.டி. பிரபாகரனும், கழக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தக் கூடாது அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று திரு. மனோஜ் பாண்டியன் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
மேலும் படிக்க | 10ஆம் வகுப்பு மாணவர்களின் கவனித்திற்கு! இன்று முதல் ஹால் டிக்கெட்
ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கிறபோது புதிதாக பொதுச் செயலாளருக்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், மாண்புமிகு அம்மா தான் பொதுச்செயலாளர் அந்த பதவிக்கு நாங்கள் யாரையும் நிறுத்துவதற்கு தயாராக இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த திரு. பன்னீர்செல்வம் நீதி மன்றம் அனுமதித்தால் நானும் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராக இருக்கிறேன், அதனால் இந்த பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது என்றும், பல்வேறு நாட்களில் மேற் சொன்ன பல்வேறு காரணங்களுக்காக ஐந்து உரிமையியல் வழக்குகள் சென்னை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.இந்த ஐந்து உரிமைகள் வழக்குகளும் உயர்நீதிமன்ற நீதி அரசர் திரு. குமரேஷ் பாபு முன்நிலையில் பல்வேறு தினங்களில் விசாரணைக்கு வந்தது.
கடந்த 17.3.2023 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு 19.3.2023 அன்று விசாரணை நடந்து முடிந்த பிறகு பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தலாம், ஆனால் முடிவுகளை அறிவிக்க கூடாது என்ற உத்தரவையும் பிறப்பித்திருந்தது. குறிப்பாக விடுமுறை தினமான 19.3.2023 ஞாயிற்றுக்கிழமையும், உகாதி விடுமுறையான 22.3.2023 அன்றும் ஏறத்தாழ 11 மணிநேர தொடர் விவாதம் நடந்து முடிந்து, வாத பிரதிவாதங்களை கேட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த மனுக்கள் அனைத்துமே செல்லத்தக்கது அல்ல என்றும், தொடர்ந்து இது போன்ற வழக்குகளால் கழகம் செயல்பட முடியாத சூழ்நிலையில் இருக்கிறது என்றும், பிரதான எதிர்க்கட்சியான அஇஅதிமுக அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுக்க இயலவில்லை என்பதையும் எடுத்துக் கூறியதன் அடிப்படையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த ஐந்து வழக்குகளையும் இன்றைக்கு தீர்ப்புக்காக பட்டியலிட்டு இருந்தது.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் 11.7.2022 அன்று நடந்த பொதுக்குழு செல்லும் என்று அறிவித்ததன் அடிப்படையில் கழக சட்ட திட்ட விதிகளை திருத்தவே இயலாது என்ற காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய இயலாது என்றும், கழக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டு ஐந்து உரிமையியல் வழக்குகளிலும் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் ஒபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளது.
மேலும் படிக்க | பாஜக ஒரு கட்சியே இல்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ