எடப்பாடி பழனிச்சாமியின் பேனர் கிழிப்பு - பழிதீர்ப்பா ?
கடந்த மாதம் அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓ,பன்னீர் செல்வத்தின் பேனர் கிழிக்கப்பட்டதற்குப் பழிதீர்க்கும் வகையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் பேனர் கிழிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வானகரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்த ஓபன்னீர் செல்வம் தனது தொண்டர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அதைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலக கதவை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அடித்து உடைத்தனர். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
அப்போது கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே இருந்த எடப்பாடி பழனிசாமியின் பேனர்கள் கிழித்தெறியப்பட்டது. கடந்த மாதம் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கே வைக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பேனர் கிழிக்கப்பட்டது.
அதற்கு பழிதீர்க்கும் வகையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் பேனர் கிழிக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR