அதிமுகவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி, இன்று அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாகக்கூறி ஓ.பன்னீர்செல்வத்தின் இரு மகன்களான ஓபி.ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். அவருடன் தற்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்ட அனைவரும் கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | OPS vs EPS: பறிபோகிறது மற்றொரு முக்கிய பொறுப்பு.. ஓபிஎஸ்-க்கு போராத காலம்


இது தொடர்பாக அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கோவை செல்வராஜ், வெங்கட்ராமன், ராமச்சந்திரன், சுப்பரமணியன், அசோகன், ஓம்சக்தி சேகர் மற்றும் முன்னாள் எம்பி-களான கோபால கிருஷ்ணன், தேனி மாவட்ட செயலாளர் சையது கான், அதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் உள்ளிட்டோர் கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர். 



இவர்களுடன் அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய மருது அழகுராஜ், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கட்சியின் பிரதிநிதிகள் அல்ல எனத் தெரிவித்துள்ளார். அதிமுகவின் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி அல்ல எனத் தெரிவித்துள்ள அவர், தங்களை அதிமுகவில் இருந்து நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை எனவும் கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஜெயலலிதாவையே நிரந்தர பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியவர். அவரிடம் இருந்து தொண்டர்களின் உதவியுடன் அதிமுகவை மீட்போம் எனக் கூறிய மருது அழகுராஜ், அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நிச்சயம் அப்புறப்படுத்துவோம் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 



அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்திருக்கும் நடவடிக்கையின் மூலம் அதிமுக சார்பில் நாடாளுமன்ற மக்களவையில் இருந்த ஒரே ஒரு எம்பியும் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. அதேநேரத்தில், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து தற்போது மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தர்மர் அதிமுகவில் இருந்து நீக்கப்படவில்லை. 


மேலும் படிக்க| எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! கிளைமாக்ஸ் நாளை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ