தமிழக முதல்வர் அணிக்கு மாறுவதற்கு ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களிடம் ரூ. 5 கோடி பேரம் பேசப்பட்டதாக தூத்துக்குடி எம்.எல்.ஏ சண்முகநாதன் இன்று கூறி இருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணி, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணி என்று பிரிந்துள்ளது. 
கூவத்தூரில் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தபோது, சசிகலா அணிக்கு மாறுவதற்கு லஞ்சம் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, டைம்ஸ் நவ் சிறப்பு செய்தியும் வெளியிட்டு இருந்தது.


இந்லையில் இன்று மீண்டும் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த தூத்துக்குடி எம்.எல்.ஏ., சண்முகநாதன்  குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். 


எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாறுவதற்கு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.,5 கோடி தருவதாக எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள் பேரம் பேசினர்' என்ற குற்றச்சாட்டை அவர் தெரிவித்துள்ளார்.