ராகுல் காந்தி பிரதமரானால் தமிழகம் பாலைவனமாகிவிடும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரட்சரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.


அப்போது மக்களிடம் அவர் பேசியதாவது; எடப்பாடி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மேகதாது அணை கட்டப்படும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்ததாக கூறினார். இதன்மூலம், ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட ராகுல் காந்தி பிரதமரானால், தமிழகம் பாலைவனமாகிவிடும் என்று முதலமைச்சர் குற்றம்சாட்டினார். 


மேலும், அ.தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து இதுவரை 35 நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 210 சட்டமன்ற தொகுதிகளுக்குச் சென்று பல்வேறு இடங்களில் பேசிவந்துள்ளேன். நான் பொதுமக்களை சந்திப்பதைத் தான் முழு நோக்கமாக கருதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன்.


ஆனால், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை பற்றியும், கூட்டணி கட்சி தலைவர்கள் பற்றியும் தரக்குறைவாக பேசி வருகிறார். தி.மு.க.வினர் இதுவரை தேர்தல் சமயத்தில் அளித்த எந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றியுள்ளனரா? தேர்தலுக்கு தேர்தல் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, மக்களை குழப்பமடையச் செய்து வாக்குகளை பெறுவதே அவர்கள் வழக்கம். ஆனால், அ.தி.மு.க. அரசு அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது என அவர் தெரிவித்தார்.