சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் தனியார் நாளிதழின் பவள விழாவில் சிறப்பு விருந்தினராக இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும். நாளிதழ்கள் செய்திகளை மட்டும் இல்லாமல் தொலைநோக்கு சிந்தனையையும் அளிக்கிறது. 


பத்திரிகை சுதந்திரம் மக்கள் நலனுக்காக சரியாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நாளிதழ்களை தனியார் நடத்தினாலும் பொதுநலனுக்காக அவை செயல்பட வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி ஊடகத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 


பெரும்பாலான நாளிதழ்கள் அரசியலை மையப்படுத்தி செயல்படுகின்றன. பொதுமக்கள் பிரச்சனைகளை நாளிதழ்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றும் பேரிடர் காலங்களில் ஊடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் பிரதமர் மோடி கூறினார்.