சென்னை: தமிழ்நாடு எப்போதுமே கல்வித்தரத்திற்கும், தரமான கல்வி நிறுவனங்களுக்கும் பெயர் போனது. தமிழகத்தில் உள்ள அளவுக்கு தொழிற்கல்விப் படிப்புகள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்றே சொல்லலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ள திமுக அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் ஆன்லைனுக்கு மாறியதும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தானதற்கும் காரணம் கொரோனா பரவலின் தாக்கம் தான்.


இந்த நிலையில், தற்போது அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்து ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் த.முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.


Also Read | Covid-19 Deaths: தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா?


சேர்க்கை குறைவதற்கான காரணிகளைக் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான பரிந்துரைகளை இந்த ஒரு நபர் ஆணையம் ஒரு மாதத்திற்குள் அளிக்கும்! இது தொடர்பாக தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.



"2020- 2021 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதேபோன்று, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின் படி, அரசுக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டு, இந்நிலை மாற்றப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளனர்.


இக்கோரிக்கையினைத் தீர ஆராய்ந்தும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைகள் குறித்தும், அதனால் அவர்கள் சந்திக்கக்கூடிய இடர்பாடுகள் ஏதுமிருப்பின், அவற்றைக் கண்டறியவும், கடந்த ஆண்டுகளில் அம்மாணவர்களின் சேர்க்கை பல்வேறு தொழிற்கல்வி நிறுவனங்களில் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்தும், மேலே கூறிய அக்காரணிகளால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை தொழிற்கல்விகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் குறைந்த அளவில் உள்ள நிலையே இருப்பின், இந்நிலையை சரி செய்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய, டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (15/06/2021) உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம், தனது அறிக்கையினை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும்". இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also Read | MK Stalin டெல்லி பயணம்: பிரதமர் மோடி, சோனியா காந்தி ஆகியோரை சந்திக்கிறார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR