Covid-19 Deaths: தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா?

  கொரோனாவின் இரண்டாவது அலை பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. முக்கிய தமிழக அரசு மருத்துவமனைகளில் COVID-19 இறப்புகளை பெருமளவில் குறைத்துக் காட்டுவதாக திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 15, 2021, 05:05 PM IST
  • தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா?
  • தரவுகளுடன் ஒப்பிட்டு வெளிப்படுத்தப்படும் தகவல்
  • கோவிட் இறப்புகளை குறைத்துக் காண்பிப்பதால், சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு பாதிப்பு
Covid-19 Deaths: தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா? title=

சென்னை:  கொரோனாவின் இரண்டாவது அலை பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. முக்கிய தமிழக அரசு மருத்துவமனைகளில் COVID-19 இறப்புகளை பெருமளவில் குறைத்துக் காட்டுவதாக திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த ‘அறப்போர் இயக்கம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் (NGO), மாநில அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலின்படி இறப்புக்கான மருத்துவ சான்றிதழை (எம்.சி.சி.டி) வழங்குமாறு மருத்துவமனைகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் என்று அந்த NGO வலியுறுத்துகிறது. 

உண்மையில், கோவிட் இறப்புகளை குறைத்துக் காண்பிப்பதற்காக, செய்யப்படும் தவறானது, கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு மிகப் பெரிய தீங்கு இழைப்பதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் அரசு வழங்கும் எந்தவொரு இழப்பீடோ, உதவித்தொகையோ கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவதற்கு இது வழிகோலும்.

Also Read | கோவிட்டால் முதியோர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்காக, கொரோனாவால் இறந்தவர்களுக்கு வழங்கப்படும் இறப்புச் சான்றிதழில், வேறு காரணம் குறிப்பிடப்பட்டால், அது அந்த குடும்பங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகிறது. 

2019, 2020, 2021 ஆம் ஆண்டுகளுக்கான ஜனவரி-மே இறப்புச் சான்றிதழ்களின் தரவை ஒப்பிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர் , கருர், திருப்பூர் என ஆறு மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளின் தரவை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கையை அறப்போர் இயக்கம் தயாரித்துள்ளது.  

கடந்த ஆண்டு கொரோனா உயிரிழப்பு தரவுகளுடன் இந்த ஆண்டு தரவுகளை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒப்பிட்டு காட்டுகிறது அறப்போர் இயக்கம். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் 4,437 பேர், 2020 ஏப்ரல்-மே மாதங்களில் 3,261 பேர் மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான ஏப்ரல்-மே 11,699 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக பதிவாகியுள்ளன.

ஆனால், தினசரி அடிப்படையில் சுகாதாரத் துறை வெளியிடும் கொரோனா தகவல் அறிக்கையின்படி, இந்த மருத்துவமனைகளில் இறப்பு எண்ணிக்கை 863 மட்டுமே என்பது குறிப்பிடத்தகக்து என தன்னார்வ தொண்டு நிறுவனம் சுட்டிக் காட்டுகிறது.

Also Read | தமிழ் ‘குடி’ மகன்களின் சாதனை: ஒரே நாளில் ₹164.87 கோடியை கடந்த மது விற்பனை

ஏப்ரல்-மே இறப்புகளை அடிப்படையாகக் கொண்ட மாநில அளவிலான மதிப்பீட்டை, இந்த அடிப்படையில் பார்த்தால் “அரசு வழங்கும் தரவுகளைவிட பாதிப்பு விகிதம் 8.4 முதல் 8.8 மடங்கு வரை அதிகம் இருக்கும். சுகாதாரத் துறை அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் இறப்பு எண்ணிக்கை 12,943. அப்படியென்றால், உண்மை எண்ணிக்கை 1.08-1.25 லட்சமாக இருக்கும்” என்று அறப்போர் இயக்கம் கூறுகிறது.

எனவே, மக்களுக்கு ஏற்படும் பல்வேறு சிக்கல்களை சரிசெய்யும் நடவடிக்கையாக, அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2019, 2020 மற்றும் 2021 மூன்று ஆண்டுகளிலும், மருத்துவமனைக்கான மற்றும் கொரோனாவால் வீட்டில் இறந்தவர்கள் என அனைத்து கோவிட் இறப்புகளையும் இணைத்து, உயிரிழப்புத் தரவுகள் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்றும் அரசுக்கு அறப்போர் இயக்கம்  பரிந்துரைத்துள்ளது.

Also Read | MK Stalin டெல்லி பயணம்: பிரதமர் மோடி, சோனியா காந்தி ஆகியோரை சந்திக்கிறார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News