அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை வரும் மே 13-ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு உபகரணம் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலவாணி மோசடி வழக்கு கடந்த 1996-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை எழுப்பூர் நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.


நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடன் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் சிறை தண்டனை பெற்று வரும் சசிகலா உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் அந்திய செலவாணி மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் நேரடியாக ஆஜராக முடியாமல் போனது.


இந்நிலையில் அந்நிய செலவாணி மோசடி வழக்கில் நீதிபதிகள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வரும் 13-ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.