அரவங்குறிச்சி, சூலூர்; தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்!
அரவங்குறிச்சி மற்றும் சூலூர் தொகுதி இடைத்தேர்தல் அலுவலர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது!
அரவங்குறிச்சி மற்றும் சூலூர் தொகுதி இடைத்தேர்தல் அலுவலர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது!
தமிழகத்தில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்கள் நேற்று முன்தினம் நடைப்பெற்றது. இதில் வேலூர் மக்களவை தொகுதி தவிர்த்து மற்ற 38 தொகுதிகளுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்தது. இத்துடன் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களுக்கும் மக்கள் வாக்களித்தனர்.
இதேபோன்று வரும் மே 19-ஆம் நாள் அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், அரவங்குறிச்சி மற்றும் சூலூர் இடைத்தேர்தல் நடத்தும் அலுவர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக மீனாட்சி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஈஸ்வரன், அமுதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக பாலகிருஷ்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஜெயராஜ், மீனாகுமாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
அரவக்குறிச்சி மற்றும் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.