ஏப்ரல் 3 முதல் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துக்கு தடை- தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் மேற்கொள்வதற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் விதிகளை மீறுவோருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
இதற்கிடையில் தமிழக சட்டமன்ற தேர்தல் (Assembly Elections) வாக்குப்பதிவுக்கான பிரசாரங்கள் மும்முரமாக இருக்கும் நிலையில் நட்ச்த்திர வேட்பாளர்களும், முக்கியமான தொகுதிகளும் களை கட்டியுள்ளன. மேலும் இந்த தேர்தல் பிரசாரத்தில் விதிகளை மீறுபவர் மீது தேர்தல் ஆணையம் (Election Commission) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதே சமயம் தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய உத்தரவுகளை அவ்வப்போது பிறப்பித்து வருகிறது.
ALSO READ: போக்குவரத்து துறை வேலை மோசடி தொடர்பாக சென்னையில் குற்ற பிரிவு போலீஸார் சோதனை..!!!
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
சில இடங்களில் சமூக விரோதிகள் மோட்டார் சைக்கிள்களில் வந்து வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாகவும், வாக்குப்பதிவு நாளன்றும் வாக்காளர்களை மிரட்டிச் செல்வதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் வெளியாகியுள்ளது. எனவே, எந்தவொரு இடத்திலும் வாக்குப்பதிவு நடக்கும் நாளுக்கு 72 மணி நேரம் முன்பிருந்து தேர்தல் நாளான 6 ஆம் தேதி வரை மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலம் செல்ல தடை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த உத்தரவை குறிப்பாக வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: தமிழக சட்ட மன்ற தேர்தல்களை புறக்கணிப்போம்; ராமேஸ்வரம் மீனவர்கள் எச்சரிக்கை
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR