தமிழகத்தில் TASMAC கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து வரும் 16-ஆம் தேதி காலை பத்து மணி முதல் 18-ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது!
தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து வரும் 16-ஆம் தேதி காலை பத்து மணி முதல் 18-ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது!
தேர்தல் நாட்களில் மதுபான விநியோகத்தினை கட்டுப்படுத்தும் விதமாக வரும் ஏப்ரல் 16-ஆம் நாள் காலை பத்து மணி முதல் வாக்குப் பதிவு தினமான 18-ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹு உத்தரவு பிரப்பித்துள்ளார்.
அதேப்போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 23-ஆம் தேதியன்றும் மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அவர் தெரவித்துள்ளார். தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் சுமார் 951 லிட்டர் பிராந்தி மற்றும் ரம், 410 லிட்டர் பீர், 17 ஆயிரத்து 675 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேலையில் ஆவணமின்றி எடுத்துச் எடுத்துச் செல்லப்பட்ட 128 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், வேலூரில் பிடிபட்ட பணம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
தபால் ஓட்டுப் பதிவு தொடர்பான அறிவிப்பு வெளியிட்டுள்ள அவர் வரும் 13-ஆம் தேதிவரை மாவட்ட வாரியாக காவலர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹு நாளை மாலை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இறுதிகட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள், தபால் வாக்குப்பதிவு நிலவரம், மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு மையங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், துணை ராணுவத்தை பணி அமர்த்துதல் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.