வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற புகாரில் ரத்து செய்யப்பட்ட வேலூருக்கு ஆகஸ்ட் 5 தேர்தல் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இவற்றுக்கான தேர்தல் முடிவு கடந்த மே மாதம் 23 ஆம் தேதி வெளியானது. தமிழக மக்களவை தேர்தலின் போது பணப்பட்டுவாடா நடைபெற்றதாக வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 


இதையடுத்து, மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஜூலை 11 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஜூலை18 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஜூலை 19 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 22 ஆம் தேதியாகும்.


வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.