அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விடாது துரத்திக் கொண்டிருக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மதுபானம் மற்றும் ஆயத்தீர்வை, மின்சாரம் என பவர்புல் துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், அதிமுகவின் கோட்டை என்று கூறப்படும் கொங்கு மண்டலத்தில் தீவிரமாக கட்சி பணிகளை ஆற்றினார். குறிப்பாக, பாஜகவின் செல்வாக்கு அதிகம் இருப்பதாக கருதப்படும் கோவையில் முகாமிட்டு உள்ளாட்சி, நகர்புற தேர்தல்களில் திமுகவின் செல்வாக்கை உயர்த்தினார். அதிமுக, பாஜகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை திமுகவுக்கு கொண்டு வரும் பணிகளிலும் மும்முரமாக செயல்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ’சித்தியுடன் நெருக்கம்’ தட்டிகேட்ட அத்தை கொலை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு


அவரின் அரசியல் களப்பணி அதிமுக மற்றும் பாஜகவுக்கு அப்பகுதியில் நெருக்கடியை ஏற்படுத்த தொடங்கியது. இந்த சூழலில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே நிலுவையில் இருக்கும் வழக்குகளை கையில் எடுத்தது அமலாக்கத்துறை. அதிமுக ஆட்சியில் அவர் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துறையில் பணி நியமனம் தொடர்பாக இருந்த வழக்கை கையில் எடுத்தது. அத்துடன் அவருக்கு சொந்தமான மற்றும் நெருங்கிய நபர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு அதன் முடிவில் முக்கிய சொத்து ஆவணங்கள் மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பான தகவல்களை கைப்பற்றப்பட்டது. இது குறித்து தற்போது அமலாக்கத்துறை காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


இந்த சூழலில், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம்நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா வீட்டில் இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்துகின்றனர். இந்த வீட்டில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு வருமானவரித்துறை அதிகாரிகள் முதன்முறையாக சோதனையை நடத்தினர். அப்போது கட்டுமான பணி நடைபெறும் சுற்றுச்சுவரின் கதவில் அசோக் குமார் நேரில் ஆஜராக கூறி முதன்முறையாக சம்மன் ஒட்டி இருந்தனர்.


ஆனால் உடல் நிலையை காரணம் காட்டி, சிகிச்சையில் இருப்பதாக கூறி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில், இப்போது நடைபெற்று வரும்  சோதனை கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணைக்குப் பிறகான சோதனை என்பதால், ஏதேனும் தகவலின் அடிப்படையிலேயே இந்த சோதனை இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.


மேலும் படிக்க | சிகப்பாக குழந்தை பிறந்ததால் மனைவி சித்திரவதை செய்யப்பட்டு கொலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ