கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கான கலந்தாய்வு விண்ணப்பம் குறைவு
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கான கலந்தாய்வு விண்ணப்பம் குறைந்துள்ளது.
சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் படிப்பிற்க்கான தொழில்நுட்ப கல்வி இயக்கம் நடத்தும் 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்கு ஆன்லைன் மூலம் பதிவும் செய்யும் பணி கடந்த மே 29 ஆம் தேதி முதல் தொடங்கி நேற்றுடன் (மே 31) முடிவைந்தது.
இதில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு சுமார் 30,000 விண்ணப்பங்கள் குறைந்துள்ளது. அதேபோல் 1,80,000 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 1,33,000 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
ஜூன் 17ம் தேதி கவுன்சலிங்கில் பங்கேற்க தகுதிபெற்ற மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 20ம் தேதி சிறப்பு பிரிவினருக்கும் ஜூலை 3ம் தேதி பொதுப்பிரிவினருக்கும் கலந்தாய்வு தொடங்குகிறது. ஜூலை 30ம் தேதிக்குள் பொறியில் கல்ந்தாய்வுகள் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க தொழில்நுட்பக்கல்வி இயக்கம் திட்டமிட்டுள்ளது.