அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உட்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அண்மையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இது குறித்து விவாத்தினர். அந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறினார். அவரின் இந்த பேட்டிக்குப் பிறகு அதிமுக வட்டாரத்தில் புகைச்சல் அதிகமானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சென்னை வானகரத்தில் திட்டமிட்டபடி நடைபெறுமா அதிமுக பொதுக்குழு ?


அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் இதனை விரும்பவில்லை. இதனால், தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் மா.பா பாண்டியராஜன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் தன்னை யாரும் ஓரம் கட்டமுடியாது எனக் கூறினார். ஒற்றைத் தலைமை விவகாரத்தை முன்னெடுப்பதை தான் விரும்பவில்லை எனக் கூறிய அவர், பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டு வரப்பட்டால் அது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்று கூறினார்.


இது குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பேச தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், சேலத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தினார். இன்று ஆரணிக்கு கள்ளக்குறிச்சி வழியாக ஆரணி தொகுதிக்கு கோயில் கும்பாபிஷேகத்திற்காக சென்றார். அப்போது, தியாகதுருகத்தில் அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கழக பொதுச்செயலாளரே என்றும் முழக்கங்களை எழுப்பினர். இந்த வரவேற்புக்குப் பிறகு கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். சென்னையில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம் மற்றும் மைத்ரேயன் உள்ளிட்டோருடன் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 


மேலும் படிக்க | ஒற்றைத் தலைமை கோரிக்கை வருத்தம் தருகிறது - ஓபிஎஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR