கடந்த மாதம் 22-ஆம் நாள், காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு ஒரு மித்த குரல் கொடுத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இக்கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரிடம் நேரில் வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.


இந்நிலையில் இன்று காவிரி விகராம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமைய அவர்கள் வரும் மார்ச் 7 ஆம் நாள் அனைத்து கட்சி கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். அதே வேலையில் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களும், இவ்விவகாரம் தொடர்பாக தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.


இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு வருகிற 7-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசுடன் எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.


இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பையடுத்து ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 


செய்தியாலர்களிடன் தி.மு.கா செயல்தலைவர் ஸ்டாலின் பேசியதாவது...!


காவிரி விவகாரத்தில் பிரதமர் சந்திக்க மறுப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்; சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினேன்திங்கட்கிழமை வரை காத்திருக்கலாம் என முதலமைச்சர் கூறினார்.


பிரதமர் நேரம் கொடுக்காததால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டபேரவையில் எதிர்கட்சி ஒத்துழைப்புடன் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஜனாதிபதியிடம் நேரில் அளிக்க முதல்வரும் எதிர்கட்சி தலைவரும் ஆலோசித்துள்ளனர். 


பிரதமர் சந்திக்க மறுப்பதாக கூறி எம்பிக்கள் ராஜினாமா செய்யலாம் என்ற கருத்தை முன்வைத்தோம் காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். 


காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தினரை பிரதமர் சந்திக்க மறுப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானம் என முதலமைச்சருடனான சந்திப்புக்கு பின் ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்தார்.