அதிமுக அரசு நீடிக்க சுவாமியின் புது ஆலோசனை!
எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை இழந்துவிட்டதால், அதிமுக ஆட்சி நீடிக்க சசிகலாவிடம் வேறு முதல்வரை அவர் கேட்க வேண்டிய நேரமிது என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் அதிமுக எம்.எல். ஏ.க்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் முதல்வர் அழைப்பு விடுத்திருந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 111 எம்எல்ஏக்கள் பங்கேற்றதாக தெரிவித்தார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 9 பேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறினார்.
இந்நிலையில் எடப்பாடி அரசு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமிதனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில்:-
இபிஎஸ் அதிகாரக்பூர்வமாக மெஜாரிட்டியை இழந்து விட்டார். தற்போதைய சூழலில் சசிகலாவிடம் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்று கேட்க வேண்டிய நிலையில் உள்ளார். அப்போது தான் அதிமுக அரசு நீடிக்கும், இல்லாவிட்டால் திமுக உட்புக நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.