ஈரான் சிறையிலுள்ள TN மீனவர்களை விடுவிக்க கோரி சுஷ்மா-க்கு EPS கடிதம்!
ஈரான் சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 3 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுஷ்மா ஸ்வராஜ்க்கு முதல்வர் பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தல்!!
ஈரான் சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 3 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுஷ்மா ஸ்வராஜ்க்கு முதல்வர் பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தல்!!
ஈரான் சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 3 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்க்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதற்க்கு முன்னதாக, இன்று ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் தொண்டியைச் சேர்ந்த 9 மீனவர்கள் 2 நாட்டுப்படகுகளில் நேற்று காலை மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது மாலை நெடுந்தீவு அருகே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த நேரத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக கூறி அவர்களை கைது செய்தனர்.
அத்துடன் அவர்கள் சென்ற 2 நாட்டு படகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு , ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பின்னர் மீனவர்களை மார்ச் 8 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.