காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கடிதத்தினில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... 


"மேகதாதுவில் அணை கட்டி குடிநீருக்கும், மின் உற்பத்திக்கும் பயன்படுத்துவது பற்றிய சாத்தியக்கூறு அறிக்கையினை மத்திய நீர்வள ஆணையத்துக்குக் கர்நாடக அரசு அனுப்பி உள்ளது ஒருசார்பான நடவடிக்கை.


இந்த செயல்பாடானது காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்பை மீறும் செயல்


மேகதாதுவில் அணை கட்டினால் ஆற்றின் இயற்கை நீரோட்டத்தைப் பாதிக்கும், இதன் காரணாமக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை செயல்படுத்த முடியாமல் போகும்.


வடிநிலத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் மாநிலத்தின் ஒப்புதலைப் பெறாமல் மேற்பகுதியில் இருக்கும் மாநிலம் ஆற்றின் நீரோட்டத்தைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் கூட்டாட்சி முறையில் செயல்படுத்த முடியாது


மேகதாது விவகாரத்தில் தமிழகத்தை அணுகாமல் கர்நாடக அரசு நேரடியாக மத்திய நீர்வள ஆணையத்தை அணுகியிருப்பது அரசின் வழிகாட்டுதல்களை மீறும் செயல்.


கர்நாடக அரசின் இந்த செயல்பாட்டால், தமிழகத்தின் லட்சக்கணக்கான உழவர்கள் அவதிக்குள்ளாவர். எனவே கர்நாடக அரசு அளித்துள்ள சாத்தியக்கூறு அறிக்கை மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதினை நிறுத்த வேண்டுமென மத்திய நீர்வள ஆணையத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டுமென முதல்வர் வலியுறுத்தியுள்ளார்!