மதிமுக சிட்டிங் எம்.பி., கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி...? அரசியல் களத்தில் அதிர்ச்சி
Erode MP Suicide Attempt: தற்போதைய மதிமுக ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், அவர் தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Erode MDMK MP Ganeshamurthi Suicide Attempt: தற்போதைய மதிமுக ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், அவர் தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.
பரப்புரையில் கணேசமூர்த்தி
கடந்த தேர்தலை போலவே இம்முறை திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வையாபுரி போட்டியிடுகிறார். இம்முறை தனிச்சின்னத்தில் அங்கு மதிமுக போட்டியிடுகிறது. திமுகவின் கோட்டையாக கருத்தப்படும் திருச்சியில் வெற்றி பெற்ற ஆக வேண்டும் என மதிமுகவினர் அங்கு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, கடந்தாண்டு மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதி இம்முறை திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு திமுக வேட்பாளரை ஆதரித்து, மதிமுக மக்களவை உறுப்பினர் கணேசமூரத்தி பரப்புரை மேற்கொண்டு வந்தார்.
மன உளச்சலில் இருந்தாரா...?
இந்நிலையில், வீட்டில் கணேசமூர்த்தி திடீரென மயக்கம் அடைந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின்னர் மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் உடல் நலம் கருதி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். இதற்கு முன்னதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடும் மன உளச்சலில் கணேசமூர்த்தி இருந்து வந்தாகவும், அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து போலீசார் குடும்பத்தினர் மத்தியில் எம்பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் எம்பி கணேசமூர்த்தி உடல் நலம் குறித்து விசாரிக்க அதிமுக, திமுக, பாஜக என அனைத்து கட்சியை சேர்ந்த தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்றத் உறுப்பினர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
76 வயதான கணேசமூர்த்தி 1989ஆம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வைகோ திமுகவில் இருந்து வெளியேறி மதிமுகவை தொடங்கிய நிலையில், கணேசமூர்த்தியும் அக்கட்சியில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ