வாட்ஸ் அப், பேஸ்புக்கில் இளம் பெண்களுடன் நட்பாக பழகி புகைப்படங்களை பெற்றுக் கொண்டு, மாபிங் செய்து ஆபாசமாக சித்தரித்து பல பெண்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஈரோடு பகுதியை சேர்ந்த அலாவுதீன், வாகித் ஆகிய இரு சகோதர இளைஞர்கள் கைது செய்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்.  தமிழ் சினிமா நடிகர் 'கனா தர்ஷனின்' புகைப்படத்தை பயன்படுத்தி முகநூலில் அவரது பெயரிலேயே போலி கணக்கை உருவாக்கி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நட்பு அழைப்பு விடுத்ததின் பேரில் அதனை ஏற்று அந்த பெண்  வாட்ஸ் அப், பேஸ்புக்கில் நன்றாக பேசி பழகி வந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க: ஈரோடு இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்ற இபிஎஸ் அணி!


அப்பெண்ணின் போட்டோக்களையும் வீடியோக்களையும் வாங்கிக் கொண்ட நபர் அதனை மாஃபிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவித்து விடுவதாகும் கூறி மிரட்டி சுமார் 2 லட்சம் ரூபாய் வரை பணத்தினை பறித்து உள்ளார்.  இதனால் பாதிக்கப்பட்ட பெண் காஞ்சிபுரம் சைபர் க்ரைம் போலீசில் புகார் தெரிவித்தார்.  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்த காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார்,ஈரோடு பிபி. அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த அலாவுதீன், வாகித்,ஆகிய இரு சகோதரர்கள் சமூக வலைதளங்களில் நட்புடன் பழகி பெண்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் இந்த செயலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.


இதைத்தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மா. சுதாகர் உத்தரவின் பேரில் ஈரோடு பகுதிக்கு விரைந்து சென்று இரு இளைஞர்களையும் கைது செய்து காஞ்சிபுரம் அழைத்து வந்தனர்.  பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏராளமான பெண்களிடம் மிரட்டி இதே போன்று பணம் பறித்துள்ளது தெரிய வந்ததுள்ளது.  மேலும் சகோதரர்கள் குற்றம்புரிய பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்களை கைப்பற்றி, ஒப்புதல் வாக்குமூலம் பெற்று  இருவரையும் கைது செய்து  செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைபர் க்ரைம் போலீசார் சிறையில் அடைக்கப்பட்டனர்.


மேலும் படிக்க | பான் - ஆதார் அட்டையை இணைக்க கடைசி தேதி அறிவிப்பு... அதுவும் அபராதத்துடன்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ