பான் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடுவை கடந்த இரண்டு மாதங்களில் வருமான வரித்துறை பலமுறை நீட்டித்துள்ளது. முக்கியமான ஆவணங்களை இணைப்பதற்கான கடைசி தேதி இப்போது 2023ஆம் ஆண்டு மார்ச் 31 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31, 2023க்குள் பான் அட்டை பயனாளர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்கத் தவறினால், அவர்களுக்குச் செயல்படாத பான் கார்டு செயலிழக்கச் செய்யப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2022 முதல் ஜூன் 30, 2022 வரை இணைக்காமல் இருந்தால், ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க ரூ. 1,000 அபராதம் வருமான வரித்துறையால் வித்திக்கப்பட்டது.
எனவே, நீங்கள் இன்னும் உங்கள் ஆதார் அட்டையை உங்கள் பான் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் செயலிழக்கும் முன், ரூபாய் 1,000 அபராதம் செலுத்துவதன் பிரச்னையை தவிர்க்கலாம். அதனை இணைக்க, வருமான வரித்துறை போர்ட்டலில், கணக்கு இல்லையென்றால், உங்கள் பான் நம்பரை வைத்து பயனர் ஐடியை உருவாக்கி, கடவுச்சொல்லை அமைக்கவும்.
மேலும் படிக்க | ஆதார் கார்டை வைத்து 10 நொடியில் வங்கி கணக்கை சரிபார்க்கலாம்... எப்படி தெரியுமா?
உங்கள் ஆதார் பான் எண்ணை ஆன்லைனில் இணைக்க, இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:
- www.incometax.gov.in என்ற வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ, வருமான வரி மின்-தாக்கல் இணையதளத்தைப் பார்வையிடவும்.
- உங்கள் உள்நுழைவு தகவலைப் பயன்படுத்தி வருமான வரி போர்ட்டலில் உள்நுழைக.
- ஒரு பாப்-அப் வின்டோ திரையில் தோன்றும்
- இல்லையெனில், மெனு ஆப்ஷனில் இருந்து Profile Setting-க்கு சென்று, 'Link To Aadhar' ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
- ஒரு புதிய வின்டோ திரையில் தோன்றும்.
- அதில் உங்கள் பான் எண், ஆதார் விவரங்கள், பெயர் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- தகவலைச் சரிபார்த்த பிறகு, 'எனது ஆதார் விவரங்களைச் சரிபார்க்க நான் ஒப்புக்கொள்கிறேன்' (I agree to validate my Aadhaar details) ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது 'Continue' பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்.
- OTP-ஐ உள்ளீடு செய்து, 'Validate' பொத்தானை அழுத்தவும்.
- நீங்கள் அபராதம் செலுத்திய பிறகு, உங்கள் பான்-ஆதார் இணைப்பு முடிக்கப்படும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு பம்பர் பரிசு, விரைவில் சம்பளம் உயரும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ