ஈரோடு: பிரபாகரன் உயிரோடு இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்துள்ளார். ஒன்றிய அரசு 2023-2024ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை கார்ப்பரேட் நிறுவனங்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில் உள்ளது ஏழை எளிய மக்களுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிராம புறத்தில் நிலமற்ற விசாய கூலி தொழிலாளர்களுக்கு பயனளித்து வந்த 100நாள் வேலை திட்டத்திற்கு 2014ம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதை படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது கடந்த நிதியாண்டைவிட இந்தாண்டு 25ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.


விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து மானியமும் குறைக்கப்பட்டுள்ளது என்று சுட்டிககட்டிய முத்தரசன், அதானி நிறுவனம் உலக பட்டியல் 609இடத்தில் இருந்த நிலையில் 2வது இடத்திற்கு எப்படி உயர்ந்து என்று மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை என்று கூறினார்.


மேலும் படிக்க | விடுதலை புலி பிரபாகரன் உயிருடனில்லை! பழ நெடுமாறனை மறுக்கும் இலங்கை ராணுவம்


அமெரிக்க நிறுவனம் அதானி நிறுவனம் முறைகேடுகள் குறித்து வெளியிட்டும் நாடு விவாதம் செய்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.


இதனால் அதானி நிறுவன முறைகேடுகள் குறித்து பாரளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்திய முத்தரசன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று மாலை முதல் சிபிஐ கட்சி  பிரச்சாரம் செய்ய உள்ளோம் என்று தெரிவித்தார்.


மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி குறைப்பு,அதானி நிறுவன முறைகேடுகளுக்கு பதில் தெரிவித்து விட்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முத்தரசன், தொடர்ந்து சிபிஐ கட்சியின் சார்பில் மார்ச் 7ம் தேதி 100நாள் வேலை திட்டத்திற்கு நிதி குறைப்பு கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | மதுரை மக்கள் செங்கல்லை எடுக்க போறாங்க! கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்! 


சேலம் சென்னை 8வழிச்சாலை திட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது ஆனால் அந்த திட்டம் குறித்து மீண்டும் வந்ததால் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவிப்போம். இல்லாத பிரச்சினை குறித்து எடப்பாடி பழனிசாமி பேசி திசை திருப்புகிறார் என்று முத்தரசன் தெரிவித்தார்.


யார் வாய்மூடி மெளனியாக யார் உள்ளார்கள் என்று ஊடக நண்பர்கள் உட்பட அனைவருக்கும் தெரியும் ஆளுநர் தனது உரையில் விட்டு படித்த பக்கங்கள் கூட எதிர்கட்சி தலைவர் கண்டிக்கவில்லை அதிமுக பாஜக கொடித்தடிமையிலும் கொத்தடிமையாக தான் உள்ள நிலையில் அவர் எங்களை பற்றி பேச தார்மீக பொறுப்பு இல்லை என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தனது பேட்டியில் தெரிவித்துளார்.


இலங்கையில் தமிழர்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்று கூறிய முத்தரசன், பழ நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் எந்த கருத்தையும் சொல்லமாட்டார். அவர் மூத்த அரசியல் தலைவர் என்பதால் அவர் சொல்வது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | விடுதலை புலிகள் பிரபாகரன் உயிருடன் உள்ளார் - பழ நெடுமாறன் சர்ச்சை பேட்டி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ