21 வருடங்களுக்கு பின் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது - மு.க. ஸ்டாலின்
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம். சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-
21 வருடங்களுக்கு பின் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஊழல் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பது என்பதற்கு இந்த தண்டனை உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் நிலையான ஆட்சி ஏற்பட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைக்கு தீர்வ காண நிலையான ஆட்சி வேண்டும் என அவர் கூறினார்.