நிபந்தனைகளுடன் கோயில் கலைநிகழ்சி நடத்தலாம் - மதுரைக்கிளை உயர் நீதிமன்றம்.
கோயில் திருவிழா மற்றும் பொது நிகழ்சிகளில் கலைநிகழ்சி என்ற பெயரில் ஆபாச நடனம், பாடல்களை அரங்கேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடத்தப்படும் கோயில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் என்ற பெயரில் ஆபாச நடனம், பாடல்களை அரங்கேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்க மதுரைக்கிளை உயர் நீதிமன்ற காவல்துறைக்கு உத்தரவு பிற்பித்துள்ளது.
தமிழக கிராமப்பகுதிகளில் நிகழும் கோயில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் என கலைநிகழ்ச்சி நடத்தும் வழக்கம். ஆனால் சமீப காலங்களில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச பாடல்கள், நடனங்கள் குத்துப்பாட்டுக்கள் என அரங்கேறிவருகின்றன. இதனால் போலீசாரும் காலைநிகழ்சி நடத்த அனுமதி மறுத்து வந்தனர்.
திண்டுக்கல்மற்றும் கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் நிகழும் கோயில் விழாக்களில் கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தர விட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டார்:-
*ஆடல், பாடல் நிகழ்ச்சியை இரவு 7.30 மணிக்குத் தொடங்கி 10 மணிக்குள் முடிக்க வேண்டும்.
*எந்தவிதமான ஆபாச நடனமோ, ஆபாச வசனங்களோ இடம் பெறக் கூடாது. மது போதையுடன் வருவோரை அனுமதிக்கக் கூடாது,
*மாணவர்களின் மனதைக் கெடுக்கும் விதமான இரட்டை அர்த்தப் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது.
*குறிப்பிட்ட அரசியல் கட்சி, மதம் மற்றும் ஜாதி சார்ந்த பாடல்களோ நடனமோ இடம்பெறக் கூடாது.
*கட்சி மற்றும் மதத் தலைவர்களுக்கு ஆதரவாக பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது. மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் நிகழ்ச்சி இருக்கக்கூடாது.
இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கலாம். கலைநிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும்போது நிபந்தனைகளையும் கூறி எழுத்துப்பூர்வ அனுமதி வழங்க வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்டார்.