Tamil Nadu Latest News Updates: சிவகாசி அருகே திருத்தங்கலில் அதிமுக 53ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய ராஜேந்திர பாலாஜி,"எம்ஜிஆர் படத்திற்காண வால்போஸ்ட ஒட்டியதுதான் தனது கட்சியின் அடிப்படை வேலை. லட்சக்கணக்கான தொண்டர்களின் வியர்வையிலும், ரத்தத்திலும் மலர்ந்த மலர்தான் அதிமுக இயக்கம். படத்தில் நடித்துக் கொண்டு நினைத்தவுடன் கால்சீட் கொடுத்து, கொடுக்கும் வசனத்தை பேசிக்கொண்டு போகும் கட்சி அதிமுக கிடையாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைக்கு சுள்ளான்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துகொண்டு அடுத்த எம்ஜிஆர் தான் தான் என்கின்றனர், நான்தான் முதல்வர் என்கிறார்கள். ஒருக்காலமும் அது நடக்காது. இது திராவிட பூமி, இங்கு நீதி கட்சி திக, அதிமுக, திமுக - இதுதான் தமிழகத்தின் சூழல். புதிதாக கட்சி துவங்கியவர் எல்லாம் எதிர்ப்புகளை சந்திக்க முடியாது, பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாது, அவர்களால் வெள்ளி விழா கூட கொண்டாட முடியாத நிலையில் 30 நாட்களுக்குள் ஓடி விடுவார்கள்" என்றார்.


விஜய் மீது மறைமுக தாக்கு?


இது தற்போது நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக தாக்கிப்பேசுவது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர். எம்ஜிஆர் சினிமாவின் உச்சத்தில் இருந்து அரசியல் செயல்பாடுகள் மூலம் முதல்வரானார். தற்போது நடிகர் விஜய் சினிமாவில் அவரின் உச்சத்தில் இருந்து தற்போது அரசியலுக்குள் வந்துள்ளார். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை குறித்து நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் அக். 27ஆம் தேதி நடைபெறுகிறது. 


'திமுகவால் மீண்டும் மன்னராட்சி'


மேலும் அந்த கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி திமுகவையும் விமர்சித்து பேசினார். அதில் அவர்,"எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நடக்கின்ற போர் என்பது அதிமுகவுக்கும் - திமுகவுக்கும் தான். பாஜகவோ காங்கிரஸோ களத்திலேயே இல்லை. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அதிமுகவால் மட்டுமே முடியும். திமுகவில் பரம்பரை வாரிசு அரசியல் என்ற கலாச்சார சீர்கேடு உள்ளது. மீண்டும் முடிசூடா மன்னர் ஆட்சி போல் திமுகவில் உள்ளது. 


மேலும் படிக்க | உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? இனி பட்டனை தட்டுங்க போதும்


அதிமுக விருச்சிகமாக வளர தமிழக மக்கள் தான் காரணம். 53 வயது கொண்ட அதிமுக 31 வருடங்கள் நாடாண்ட  கட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. திமுகவில் உழைப்பவனுக்கு மரியாதை இல்லை. ஏய்ப்பவனுக்குத்தான் மரியாதை. திமுகவின் பரம்பரை வாரிசு கலாச்சார சீரழிவு. அதிமுகவில் உழைப்பின் மூலமாக படிப்படியாக பதவி கிடைக்கும். கட்சிக்கு விசுவாசியாக இருந்து உழைத்தால் அதிமுகவில் உயர்ந்த இடத்திற்கு வரலாம். 


'எடப்பாடியை கோட்டைக்கு அனுப்புங்கள்'


திமுக ஆட்சியில் பட்டாசு தொழிலும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து உயர் நீதிமன்றமே கேள்வி எழுப்பி உள்ளது. அனைத்து தரப்பினர்களும் பாதிக்கபட்டுள்ள இந்த திமுக ஆட்சி வேண்டுமா? என்பதை மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.  மக்களுக்காக வேலை பார்க்கவும் தெரியவில்லை, வேலை செய்யவும் தெரியாத திமுக ஆட்சி என்பது ஜீரோ என்பதால் யாருக்கும் எந்தவிதமான லாபம் இல்லை. எனவே ஸ்டாலினை  வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவர் நலமாக வாழட்டும். எடப்பாடி பழனிச்சாமியை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்புங்கள். 


அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. வேலை ஏதும் நடக்கவில்லை என்றால் டெல்லியில் இருந்து பணம் வரவில்லை என்கின்றனர். 40- எம்பிக்கள் யாரும் கேள்வி கேட்க மாட்டீர்களா?  சென்னையில் கோஷம் போடாமல், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு கோஷம் போடுங்கள். திமுகவினர் மக்களை ஏமாற்றி தலையில் மிளகாய் அரைக்கின்றனர். செவிட்டு ஆட்சியான திமுகவுக்கு காது கேட்கவில்லை. 


'மக்கள் செய்த தவறு'


அதிமுக ஆட்சியில் வெள்ள பாதிப்பின் போது கடுமையாக வேலை பார்த்தோம். ஆனால் திமுகவில் யாரும் வேலை பார்க்கவில்லை. வெள்ளத்தில் தத்தளித்த சென்னை தப்பித்துவிட்டது. திமுக ஆட்சி விரட்டி அடித்து விட்டு அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். மனிதநேயத்துடன்  ஏழை- எளிய மக்களுக்கு உதவும் கட்சி அதிமுக இயக்கம். கடந்த தேர்தலில் தமிழக மக்கள் தங்களது உரிமைச் சீட்டான வாக்குச்சீட்டால் தவறு செய்து விட்டனர். இனிவரும் காலத்தில் நித்திரை களைத்து இரட்டை இலை சின்னத்தில் முத்தரையிடுங்கள். 2026ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைய 8 கோடி தமிழக மக்களும் முடிவு எடுத்துவிட்டனர்" என்றார்.


மேலும் படிக்க | ரூ.200.. அரசு பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ