சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம்..மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு ப.சிதம்பரம் ஆதரவு
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள மருத்துவர் ரத்தினவேலுக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் 68-வது குழுவாக இணைந்த 250 முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆங்கிலத்தில் ஏற்ற உறுதிமொழியில் சமஸ்கிருத வாக்கியங்கள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.
கி.மு.460-ம் ஆண்டில் இருந்து கி.மு.370-ம் ஆண்டு வரை வாழ்ந்த கிப்போகிரேட் மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். எனவே மருத்துவத்தின் தந்தையான கிப்போகிரேட் பெயரில் உறுதிமொழி ஏற்பது மருத்துவம் படிப்போரின் வழக்கமாக இருந்து வருகிறது. மகரிஷி சரக் சப்த் உறுதிமொழி எடுக்கப்பட்டதற்குக் கடும் கண்டனம் எழுந்த நிலையில், கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | தமிழ் வளர்த்த மதுரையில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி
ஆனால், நிகழ்ச்சியை நடத்திய மருத்துவ மாணவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் இணையதளத்தில் இருந்து இருந்த உறுதிமொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகவும், கல்லூரி முதல்வரின் கவனத்திற்கு வராமலேயே இவ்விவகாரம் நடைபெற்றதாகவும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர் தலைவர் உள்ளிட்ட 4 மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினார்.
ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்குப் பதிலாக மகரிஷி சரக் சப்த் எடுத்த செயலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இருப்பினும் இவ்விவகாரத்தில் மருத்துவக் கல்லூரி டீனுக்குத் தெரிவிக்காமல் மாணவர் பேரவைத் தலைவர் இந்தத் தவறைச் செய்திருக்கிறார் என்று பல மருத்துவர்கள் கூறியிருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது -ஒரு நல்ல, மூத்த மருத்துவரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை" என்று பதிவிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR