கடந்த அதிமுக ஆட்சியில் சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் சரோஜா. சரோஜா அமைச்சராகப் பதவி வகித்தபோது சத்துணவு அமைப்பாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து ரூ.76.5 லட்சம் வசூலித்து அவரிடமும், அவரது கணவர் லோகராஜனிடமும் வழங்கியதாகவும், ஆனால், பணத்தை பெற்றுக் கொண்டு எவருக்கும் பணி நியமனம் வழங்கவில்லை எனவும் கூறி குணசீலன் என்பவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சரோஜா மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல் துறையினர் தங்களை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 


மேலும் படிக்க | பண மோசடி ? : முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவருக்கு முன் ஜாமீன்



அந்த மனுவில், பணிநியமனம் வழங்குவதாக கூறி எவரிடமும் பணம் பெறவில்லை எனவும், புகார் அளித்த குணசீலன் தங்கள் உறவினர் என்றும் குடும்ப பகை காரணமாக தங்களுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சரோஜா குறிப்பிட்டிருந்தார். மேலும் சத்துணவு அமைப்பாளர்கள், தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களால் நியமிக்கப்பட்டதாகவும்,  இந்த புகார் தொடர்பாக ராசிபுரம் போலீசார் ஏற்கனவே தங்களை விசாரித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கினார். விசாரணை நீதிமன்றத்தில் 25 லட்ச ரூபாயை செலுத்த வேண்டுமெனவும், இருவரும் இரண்டு வாரங்களுக்கு தினமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது. 


சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி முன்னாள் அமைச்சர் சரோஜாவும், அவரது கணவர் லோகராஜனும் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 8 மாதங்களாக முன்னாள் அமைச்சர் சரோஜா தலைமைறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க | 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR