வரும் ஆகஸ்ட்., 14-ஆம் நாள் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக தலைவர் மு கருணாநிதி அவர்கள் மறைவினை அடுத்து அக்கட்சியின் முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக வரும் செவ்வாய் அன்று காலை 10 மணியளவில் திமுக செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கலைஞர் அரங்கில் நடைப்பெறும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு முக ஸ்டாலின் தலைமையேற்பார் எனவும் தெரிவித்துள்ளது.



இந்த செயற்குழு கூட்டத்தில் திமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இது என்பதால், இந்த கூட்டத்தில், திமுக தலைவர் யார் எனபது போன்ற முக்கிய முடிவுகள் பல எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.