டெல்லி: கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற 2019 மக்களவை தேர்தல் நேற்றுடன் (மே 19) முடிந்தது. மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி வேலூர் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்றுடன் மக்களவை தேர்தல் நடந்து முடிந்து விட்டதால், அனைத்து ஊடகங்களும் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. நாடு ழுமுவதும் பாஜக-வின் கை ஓங்கி இருப்பதையே பெரும்பாலும் ஊடங்களின் கருத்து கணிப்பு ஆகா உள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.


இந்தநிலையில், நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா நாளை விருந்து தர இருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது. 


அதுமட்டுமில்லாமல், நாளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த கூட்டத்தில் முக்கியமாக தேர்தல் முடிவுக்கு பிறகு எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள், ஒருவேளை பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், கருத்து கணிப்பின் முடிவுகள் குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிகிறது. 


இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தின் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க்க உள்ளார். அதற்காக நாளை அவர் டெல்லி செல்கிறார். தேசிய ஜனநாய கூட்டணியில் அதிமுகவும் அங்கம் வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.