Tamilisai Soundararajan Reaction On Exit Poll Results 2024: புதுச்சேரி மற்றும் தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பிறந்தநாளை முன்னிட்டு குடியாத்தம் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி ஆனந்தனை சந்தித்து ஆசி பெற்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் அத்தி இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். குமரி ஆனந்தன் தமிழிசை சௌந்தர்ராஜனை நோக்கி, வெற்றி திருமகள் வாழ்க வெற்றி திருமகள் வாழ்க என தனது மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.


மத்தியில் 3வது முறையாக...


பின்னர் செய்தியாளரிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,"தன்னுடைய பிறந்தநாள் செய்தியாக என்னுடைய வாழ்க்கை முழுவதும் பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்துள்ளேன். மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் சேவை செய்ய வேண்டும். அதற்காக தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன். எனக்கு மக்கள் ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற்றவுடன் மக்களுக்காக பாடுபடுவேன்.


மேலும் படிக்க | Exit Poll முடிவுகளுக்கு திமுக பரபரப்பு ரியாக்சன்... டிகேஎஸ் இளங்கோவன் சொன்னது என்ன?


அதிக அளவில் படித்தவர்கள் மாணவ மாணவிகள் இளைஞர்கள் எல்லோரும் பொதுவாழ்க்கைக்கு வந்தால் தான் அரசியல் தூய்மைப்படுத்தப்படும். பொது வாழ்க்கை என்பது மக்களுக்காக இல்லாமல் தனக்காகவும் தனது குடும்பத்துக்காக என மாறி வருகிறது. தமிழகத்திலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்கிறார் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை" என்றார்.


எக்ஸாக்ட் போல் வரும்போது... 


தொடர்ந்து, நேற்று மாலை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்த கேள்விக்கு அவர்,"தமிழகத்தில் இன்னும் கொஞ்சம் அதிக இடங்களை எதிர்பார்த்தோம். இன்னும் அதிக சதவீதம் எதிர்பார்த்தோம். எக்ஸிட் போலை விட எக்ஸாக்ட் போல் இன்னும் அதிக இடங்களில் கைப்பற்றுவோம்.


மாநிலத்திலும் மத்தியிலும் ஒரே ஆட்சி இருந்தால் நிறைய திட்டங்கள் கொண்டு வரலாம். அதற்கான ஆரம்ப கட்டம்தான் இந்த தேர்தல். திராவிட கட்சிகள் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளோம். பிரதமர் மோடி எத்தனையோ மாநிலம் இருக்கிறது, அதற்கு செல்லலாம். ஆனால் அவர் தமிழகத்திற்கு குறிப்பாக குமரிக்கு வந்து பிரார்த்தனை செய்வது நமக்கு பெரிய பாக்கியமாக கருத வேண்டும்" என்றார்.


நேற்று மாலை வெளியான பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகிளின் இந்தியா கூட்டணி 100 - 150 இடங்களைதான் வெல்லும் எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளின் தகவல்கள் எப்போதும் துல்லியமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | TN Exit Polls : தமிழ்நாட்டில் மாற்றங்கள் நிகழுமா? வெற்றி வாய்ப்பு யாருக்கு? முழு விவரம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ