Exit Poll முடிவுகளுக்கு திமுக பரபரப்பு ரியாக்சன்... டிகேஎஸ் இளங்கோவன் சொன்னது என்ன?

Exit Poll DMK Reaction: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 1, 2024, 10:17 PM IST
  • இன்றுடன் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.
  • திமுக அதிக தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்படுகிறது.
  • இந்திய அளவில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்றும் பெரும்பாலான நிறுவனங்கள் கூறுகின்றன.
Exit Poll முடிவுகளுக்கு திமுக பரபரப்பு ரியாக்சன்... டிகேஎஸ் இளங்கோவன் சொன்னது என்ன? title=

Exit Poll DMK Reaction: 18ஆவது மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்றது. ஏப். 19ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் போட்டியின்றி பாஜக வென்றது. மீதம் உள்ள 542 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. 

தேசியளவில் பல நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மீண்டும் பிரதமர் மோடி பிரதமராகலாம் என்றும் கூறப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஓரளவுக்கு சரியாக இருக்கும் என நம்பப்பட்டாலும், அதில் தவறு ஏற்படவும் வாய்ப்புள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை முழுமையாக காண இதனை கிளிக் செய்யவும்

தமிழ்நாட்டில் பலரும் கணித்தபடி திமுக கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றுகிறது என கூறப்படுகிறது. India Today - My India Axis கருத்துக்கணிப்புகளின்படி, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 33-37, அதிமுக 0-2, தேசிய ஜனநாயக கூட்டணி 2-4 ஆகிய தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், கொமதேக, இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் ஆகியவை பெரும்பாலான இடங்களில் வெல்லும்.

மேலும் படிக்க | TN Exit Polls : தமிழ்நாட்டில் மாற்றங்கள் நிகழுமா? வெற்றி வாய்ப்பு யாருக்கு? முழு விவரம்..

அதேபோல் பாஜக, பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி தமிழ்நாட்டில் இந்த முறை ஓரிரு இடங்களை வெல்லலாம். குறிப்பாக, பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை தொகுதி மற்றும் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா போட்டியிட்ட தர்மபுரி தொகுதிகளை கூறலாம். அதிமுக - தேமுதிக பெரும்பாலான இடங்களில் வாக்கை பிரித்தாலும் பெரியளவில் தொகுதியை கைப்பற்ற வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி பெரும்பாலான கூட்டணியை பெற்றாலும் தென்னிந்தியாவிலும் பிற பகுதிகளிலும் பாஜகவே ஆதிக்கம் செலுத்துகிறது என்பதால், இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜூன் 4ஆம் தேதி வரை முடிவுகளை எதிர்நோக்கி தற்போது அனைவரும் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு, கேரளாவை தவிர்த்து கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவில் இந்தியா கூட்டணி பெரிய அளவில் சோபிக்கவில்லை என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. 

அந்த வகையில், இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், "சில மாநிலங்களில் இந்தியா கூட்டணி வெல்லும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பார்க்கப்படுகிறது. ஜார்க்கண்ட் போன்ற ஒரு சில மாநிலங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், தேர்தலை் முடிவுகளை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.

நாடு முழுவதும் இந்தியா கூட்டணி எளிதாக 300+ சீட்களில் வெல்லும் என்பதே எனது கணிப்பு. பாஜக தலைமயிலான தேசிய ஜனநாயக கூட்டணி பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பல தொகுதிகளை கண்டிப்பாக இழக்கும். மத்தியப் பிரதேசத்தைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் பாஜக சீட்களை இழக்கும். குஜராத்தில் கூட மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தது என்பது அனைவருக்கும் நினைவில் இருக்கும். எனவே, பாஜக இந்த முறை பல்வேறு தொகுதிகளை கண்டிப்பாக இழக்கும்" என்றார்.

மேலும் படிக்க | ஊடகத்துறையில் இதுவே முதல்முறை... AI உதவியுடன் Zee News Exit Poll - இதனால் என்ன நன்மை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News