கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள், ஒப்பந்தத் தொழிலாளார்கள் உள்ளிட்ட பலர் வேலையிழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டு வாடகை குடிநீர் கட்டணம், விவசாயக் கடன் தவணை செலுத்துவதற்கு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் வரும் 22 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. முந்தைய மாத கணக்கீட்டின்படி, மின்கணக்கீடு செய்யப்பட்ட தாழ்வழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை முந்தைய கணக்கீட்டின்படியோ அல்லது அவர்களது மின்அளவியில் உள்ள மின்நுகர்வுக்கு ஏற்பட திருத்தப்பட்ட பட்டியல்படியோ 22.05,2020 வரை மின் கட்டணம் செலுத்தலாம்.


இந்த நிலையில் மின் கட்டணம் செலுத்த மே 22ஆம் தேதி வரை தமிழக அரசு மேலும் அவகாசம் அளித்துள்ளது. மேலும் மார்ச் 23 முதல் மே 17 வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ளவர்கள் மே 22 வரை அபாரதமின்றி கட்டணம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.