இடியப்பம் தராததால் பொய் வழக்கு : போலீஸ் அட்டகாசம்..!
இடியப்பம் தராததால் இளைஞர்கள் மீது போலீஸ் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஜமீன் பல்லாவரத்தில் வசித்து வருபவர் சிலம்பரசன். இவர், குரோம்பேட்டை ராதாநகர் பிரதான சாலையில் இருக்கக்கூடிய காவல் நிலைய சோதனை சாவடி அருகில், கடந்த ஒருவருட காலமாக இடியாப்பம் மற்றும் புட்டு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடை, சிட்லபாக்கம் s12 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் அதை காரணமாக வைத்துக்கொண்டு அந்த கடைக்கு காவலர் சுரேஷ் குமார் என்பவர் அடிக்கடி வந்து பணம் கொடுக்காமல் இடியாப்பம் மற்றும் புட்டு சாப்பிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். காவலர் என்பதால் பயத்தில் கடையின் உரிமையாளர் சிலம்பரசனும் அவருக்கு நாள் தோறும் இலவசமாக உணவை வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல் இரண்டு தினங்களுக்கு முன்பு சிலம்பரசனின் கடைக்கு வந்த காவலர் சுரேஷ் குமார் உணவு கேட்டுள்ளார். அன்று கடையில் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்ததால் சிலம்பரசன், காவலர் சுரேஷ் குமாருக்கு உணவு கொடுக்க தாமதமாக்கியுள்ளார்.
மேலும் படிக்க | திருடிய பணத்தை திருப்பி கேட்டதால் சாகடிக்கப்பட்ட லாரி ஓட்டுநர்
இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் குமார், உணவு சாப்பிடாமல் கடையை விட்டு வெளியேறியுள்ளார். அதனை தொடர்ந்து சற்று நேரம் கழித்து கடையின் அருகே வந்த காவலர் சுரேஷ் குமார், அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த சிலம்பரசன் மற்றும் அவருடைய சகோதரர் விக்னேஷ் ஆகியோரை வழிமறித்து தகாத வார்தையில் திட்டியுள்ளார்.
அது மட்டும் இன்றி இனிமேல் மாதம் தோறும் தவறாமல் மாமூல் தர வேண்டும் என மிரட்டல் விடுத்த காவலர் சுரேஷ் குமார், சிலம்ரசன் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் பொய் வழக்குப்போட்டு சிறையில் அடைத்துள்ளார்.
இந்நிலையில் காவலராக இருந்துகொண்டு இது போன்ற மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வரும் சுரேஷ் குமார் மீது சட்ட ரீதியாக நடைவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். காவலரே ரவுடிதனத்தில் ஈடுபட்டு வரும் செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | அடுத்தடுத்து நடக்கும் மறுவாழ்வு மைய மரணங்கள்... இயற்கை மரணமா? கொலையா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR