அம்மாவை பற்றி எல்லை மீறி தவறான வதந்திகள் பரப்பபட்டு வருகிறது, அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று அன்னபூரணி அரசு அம்மா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறார் மேல்மருவத்தூர் அன்னபூரணி அம்மா.  இவர் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரல் கன்டென்ட்களாக மாறி வருகின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஆதிபராசக்தியாக மாறிய கள்ளக் காதலி


கடந்த ஆண்டு கணவனை விட்டு பிரிந்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அன்னபூரணி தற்போது அன்னபூரணி அரசு அம்மாவாக உருமாறி உள்ளார்.  "பராசக்தி அம்மாவின் திவ்ய தரிசனம், உலக மக்களை காத்து அருள ஆதிபராசக்தி அம்மா அவதாரமாக வந்துவிட்டாள்.. வாருங்க பக்தகோடிகளே" என்று போஸ்டர் அடித்து விளம்பரமும் செய்து வருகின்றனர்.  நேற்று அன்னப்பூரணி அம்மா பேஸ்புக் பக்கத்தில், "மக்கள் அனைவருக்கும் வணக்கம், அம்மாவை பற்றி தவறான வதந்திகள் youtube news channel களில் பரப்ப பட்டு வருகிறது.  இதற்கான அனைத்து விளக்கங்ளும் media மூலம் விரைவில் அம்மா உங்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்துவார்" என்று பதிவு செய்யப்பட்டு இருந்தது.  இன்று அம்மாவை பற்றி எல்லை மீறி தவறான வதந்திகள் பரப்பபட்டு வருகிறது, அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று பதிவு வந்துள்ளது.  



அன்னப்பூரணி அம்மாவிற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வரும் நிலையில் தற்போது இந்து மக்கள் கட்சியும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.  இந்து மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சண்முகம் என்பவர், மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.  அதில், அன்னப்பூரணி அரசு அம்மா என்ற பெயரில் நான் ஆதிபராசக்தி என்று கூறி இந்து மதத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் பெண்மணி மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயலானது இந்து மதத்தை நம்பி வாழுகின்ற மக்களுக்கு மிகுந்த வேதனைகளையும், மனஉளைச்சல்களையும் ஏற்படுத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.  ஏற்கனவே காவல்துறை சார்பில் அன்னப்பூரணி அம்மா சார்பில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | கொதித்தெளுந்த அன்னபூரணி அம்மா! விரைவில் செய்தியாளர் சந்திப்பு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR