மணிப்பூர் டூ சென்னை... தப்பிவந்த 9 பேர் குடும்பம் - அடைக்கலம் கொடுத்தவருக்கு பாராட்டு!
Manipur Updates: மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு சென்னை வந்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் வாழ்வாதாரத்துக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
Manipur Updates: மணிப்பூரில் இருந்து தப்பி வந்த 9 பேர் என்ன செய்வதென தெரியாமல் இரண்டு நாட்களாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கியிருந்துள்ளனர். அப்போது, அவ்வழியே சென்ற செங்குன்றத்தை சேர்ந்த மூர்த்தி (61) என்பவர் அவர்களுக்கு உதவியுள்ளார். ஜோசப் குடும்பத்தினர் என்றழைக்கப்படும் அந்த 9 பேருக்கும் தனது வீட்டில் உணவு, உடை கொடுத்து, தங்குவதற்கு தற்காலிகமாக ஒரு வீட்டையும் மூர்த்தி கொடுத்துள்ளார்.
முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இவர்களை அழைத்து சென்று மனு கொடுத்துள்ளார். "ஆட்சியரை உடனடியாக சென்று பாருங்கள். அவர் உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வார்” என முதலமைச்சர் தனிப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிப்பூரில் இருந்து வந்த அந்த குடும்பத்தினருக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், கல்வி தகுதி விவரங்களை சேகரித்து தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்வதாக ஆட்சியர் உறுதி அளித்தார். மேலும், மூர்த்தியை அழைத்து பாராட்டும் தெரிவித்தார்.
சென்னை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து செங்குன்றம் பகுதி வருவாய் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஜோசப் பின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவிய சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் அதிகாரிகளுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துவிட்டு ஜோசப் குடும்பத்தினர் சென்றனர்.
இது ஒருபுறம் இருக்க மணிப்பூரில் பதற்றம் நீடித்துக்கொண்ட தான் இருக்கிறது. நாடே பற்றியெரிந்த மணிப்பூர் கவலைக்கொண்டிருக்கிறது எனலாம். கடந்த மே 3ஆம் தேதி முதல் அங்கு நடைபெற்று வரும் வன்முறைகள், பாலியல் வன்புணர்வு போன்ற கொடூர குற்றங்களில் சிக்கி இதுவரை 160 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பலருக்கும் காயமேற்பட்டுள்ளது.
நீண்ட நாளாக அங்கு இணைய சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் இணைய சேவை மீண்டது. அதன்பின்னரே, மணிப்பூரின் கள நிலவரம் மற்ற மாநிலங்களுக்கு தெரிய தொடங்கியது எனலாம். குறிப்பாக, இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி, சாலையில் நடக்கவைத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஒரு கும்பலின் வீடியோ வெளியானதை அடுத்தே இந்த மணிப்பூர் விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது.
கடந்த வாரம் தொடங்கிய நாடாளுமன்றம், மணிப்பூர் விவகாரத்தால் முற்றிலுமாக முடங்கியுள்ளது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இரு அவைகளில் கோஷம் எழுப்பி, அலுவல்களை புறக்கணித்து வருகின்றனர்.
மேலும், மணிப்பூர் மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே நகரத்தில் நேற்று பெரும் கலவரம் வெடித்தது. மோரே நகரம் மணிப்பூரின் தெங்னௌபால் மாவட்டத்தில் இந்திய - மியான்மர் எல்லையில் உள்ளது. இங்கு மெய்டீ மற்றும் குக்கி என இரு சமூகங்களும் சம அளவில் கலந்துள்ளனர். இங்கு சுமார் 3 ஆயிரம் தமிழர்கள் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.
மியான்மரின் எல்லையில் உள்ள மணிப்பூர், குகி பழங்குடியினர் குழுவானது பழங்குடியினரல்லாத குழுவான, பெரும்பான்மை இனத்தவரான மெய்டீஸ் உடன், பழங்குடியினருக்கு வழங்கப்படும் பொருளாதார நன்மைகள் மற்றும் இட ஒதுக்கீட்டைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் தொடங்கியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ