தற்போது திரையுலகில் இருப்பவர்களை விட சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமடைவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.  அதிலும் பலரை பிரபலமாக மாற்றியது டிக் டாக், இந்த செயலி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஜி.பி.முத்துவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  இவரது அக்மார்க் டயலாக்கான "செத்த பயலே..நார பயலே" இதற்கென்றே இவரை பின்தொடர்பவர்கள் ஏராளம் என்று கூறலாம்.   டிக் டாக் செயலியின் முடக்கத்திற்கு பிறகு இவர் தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதையும் சிறப்பாக நடத்தி வருகிறார்.  மேலும் இவர் படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


தனது இயல்பான பேச்சால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வந்தவர், தற்போது அழுதுகொண்டு வெளியிட்டுள்ள வீடியோ பார்ப்பவர்களை கலங்க செய்து இருக்கிறது.  அந்த வீடியோவில், "நண்பர்களே எல்லாரையும் சிரிக்க வைத்தேன், ஆனால் அந்த ஆண்டவன் என்னை அழுக வைத்துவிட்டான்.  என் உயிர் நண்பன் என்னை விட்டு போய்ட்டான்.  நாங்கள் இருவரும் ஜாதி மதம் பார்க்காமல் உயிராக பழகினோம். 
 ஆனால் இன்னைக்கு என் நண்பன் என்னோட இல்லை.   ஆண்டவனே இல்லை, அவன் கடவுளுக்காக அவ்வளவு செய்வான், ஆனால் அவனுக்கு இப்படி ஆகிவிட்டது, ஆண்டவனே இல்லை, ஆண்டவனே இல்லை" என்று கண்ணீர் மல்க அந்த வீடியோவில் அழுதுகொண்டே கூறியுள்ளார்.  


 



இது பார்ப்பவர்கள் அனைவரையும் ஒரு நொடி கலங்க செய்துள்ளது .  இந்நிலையில் ரசிகர்கள் பலரும் ஜி.பி.முத்துவின் கவலைக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.  இவர் தற்போது சதிஷ் மற்றும் சன்னி லியோன் நடிக்கும் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO | 2021-ல் அதிகம் தேடப்பட்ட நிகழ்ச்சிகளில் முதலிடம் பிடித்த Squid Game!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR