பொங்கல் பண்டிகை என்றாலே செங்கரும்பும், மஞ்சள் கொத்தும் தான் நினைவுக்கு வரும். பழங்கால முறைப்படி வீடுகள்தோறும் பொங்கல் வைத்து செங்கரும்பும், மஞ்சள் கொத்தும் சாமிக்கு படைப்பது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் குலை தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் சக்கம்மாள், சிவத்தையாபுரம், சிவஞானபுரம், சாயர்புரம், சேர்வைகரன்மடம் உள்ளிட்ட இடங்களில் பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்ய சுமார் 500 ஏக்கரில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால் குலை மஞ்சள் நல்ல விளைச்சல் கண்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் இங்கு விளையும் மஞ்சள் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களான டெல்லி, மும்பை, பெங்களூர், குஜராத் மட்டுமின்றி உலக நாடுகளான கனடா, பாரீஸ் போன்றவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


ALSO READ | தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை தகவல்


இதுகுறித்து சிவஞானபுரத்தை சார்ந்த வெற்றிவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், மீண்டும் மஞ்சள் பை கொண்டு வந்ததற்று விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல் அடுத்த ஆண்டு தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் பயன் பெரும் வகையில் ரேசன் கார்டுதாரர்களுக்கு 2 மஞ்சள் குலையை சீதனமாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.


கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு நல்ல மழைபெய்துள்ளது. இதனால் மஞ்சள் நல்ல விளைச்சல் அடைந்துள்ளது என்றார். மேலும் இவ்வருடம் கூலிகள் அதிகரித்துள்ளதால் மஞ்சள் குலை ஓன்றுக்கு ரூ.18 வரை செலவு ஆகும் சூழல் உள்ளதால் ரூ. 50க்கு விற்றால் தான் கட்டுப்பிடியாகும் என கூறினார். பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் குலை மஞ்சள் நல்ல விளைச்சல் அடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


ALSO READ | Vijay Sethupathi: பல அவதாரங்களில் புத்தாண்டுக்கு வாழ்த்து கூறும் விஜய் சேதுபதி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR